துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
விஜய் ஆண்டனி தற்போது 'ரோமியா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெயரிலேயே இசை நிகழ்ச்சியும் நடத்த இருக்கிறார். இதற்காக கோவை சென்ற விஜய் ஆண்டனி அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்தார். இது தேர்தல் காலம் என்பதால் “நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?” என்று கேட்டதற்கு விஜய் ஆண்டனி அளித்த பதில் வருமாறு:
‛‛நான் வர வேண்டும் என்று மக்கள் ஆசைப்பட்டால் வரலாம். மற்றபடி எந்த திட்டமும் இல்லை. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைக்கும் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஒரு குடிமகனாக நிச்சயம் ஓட்டு போடுவேன். நீங்களும் ஓட்டுப் போட வேண்டும். நோட்டாவுக்கு போடுவதை விட, யாருக்காவது ஓட்டு போடுங்கள். ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள். கடந்த ஐந்து ஆண்டில் என்ன செய்திருக்கிறார்கள் என ஐந்து நிமிடம் யோசித்து ஓட்டுப் போடுங்கள். சின்ன படமோ, பெரிய படமோ கதை நன்றாக இருந்தால் வெற்றி பெறும்'' என்றார்.