தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நடித்து வருபவர் சித்தார்த். ஆரம்பத்தில் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் பின்னர் ஷங்கர் இயக்கிய ‛பாய்ஸ்' படத்தில் 5 நாயகர்களில் ஒருவராக நடித்தார். தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்தார். தற்போது கமலின் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார்.
'மஹாசமுத்திரம்' என்ற படத்தில் நடித்தபோது நடிகை அதிதி ராவ் உடன் காதல் ஏற்பட்டது. இருவரும் ஒன்றாக ஊர் சுற்றும் புகைப்படங்கள் வெளியாகின. பல நிகழ்ச்சிகளில் ஒன்றாகவே இருவரும் கலந்து கொண்டனர். நேற்றைய தினம் இவர்கள் திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வந்தன.
இந்நிலையில் சித்தார்த், அதிதி இருவரும் தங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக தெரிவித்து நிச்சயதார்த்த மோதிரத்துடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளனர். விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது.
சித்தார்த் - அதிதி இருவருமே ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர்கள். விவாகரத்துக்கு பின்னர் சமந்தாவை காதலித்தார் சித்தார்த். ஆனால் திருமணம் நடக்கவில்லை. அதேப்போல் நடிகை ஸ்ருதிஹாசன் உடனும் இவர் காதல் கிசுகிசுவில் சிக்கினார்.