மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
தென்னிந்தியத் திரையுலகத்தின் 'ஹாட்' ஆன காதல் ஜோடி என கிசுகிசுக்கப்படுபவர்கள் ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டா. இருவரையும் சேர்த்து பல கிசுகிசுக்கள் வந்துவிட்டது. ஆனால், இருவரும் தங்களது காதலைப் பற்றி இதுவரை எதுவும் சொன்னதில்லை.
நாளை ஏப்ரல் 5ம் தேதி ராஷ்மிகாவின் பிறந்தநாளைக் கொண்டாட காதல் ஜோடி அபுதாபி சென்றுள்ளதாகத் தெரிகிறது. நாளை விஜய் தேவரகொண்டா நடித்துள்ள 'பேமிலி ஸ்டார்' படமும் வெளியாக உள்ளது.
ராஷ்மிகா அவரது இன்ஸ்டாவில் ஒரு மயில் புகைப்படத்தைப் பகிர்ந்து 'இந்த பியூட்டியைப் பார்த்தேன்,” எனப் பதிவிட்டுள்ளார். 'பேமிலி ஸ்டார்' படத்திற்காக விஜய் தேவரகொண்டா பேசியுள்ள ஒரு வீடியோவின் பின்னணியில் ஒரு மயில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த 'மயில்' மேட்டரை வைத்துத்தான் இருவரும் ஒரே இடத்தில் ஒன்றாகத் தங்கியிருந்து பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்கள் என சமூக வலைத்தளங்களில் பேசி வருகிறார்கள்.
அழகான மயிலைக் காதலித்துவிட்டு அக்காதலைப் பற்றி மக்களுக்குத் தெரிவிக்கலாமே விஜய் ?, ஏன் இந்தத் தயக்கம் ?.