சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வரும் ‛கோட்' படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, பிரேம்ஜி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்நிலையில் நேற்று தனது 51வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் பிரசாந்த், ‛கோட்' படம் குறித்து ஒரு அப்டேட் கொடுத்துள்ளார்.
அதில், கோட் படம் ரொம்ப நன்றாக வந்துள்ளது. இப்படம் ரசிகர்களுக்கு ஒரு மிகச்சிறந்த விருந்தாக இருக்கும். இந்த படத்தில் நான் நடித்திருக்கும் கதாபாத்திரம் குறித்து இப்போதே சொல்ல விரும்பவில்லை. ஆனால் வித்தியாசமான வேடம். மற்றபடி ரிலீசுக்கு பிறகு அதை தெரிந்து கொள்வீர்கள் என்று தெரிவித்துள்ளார் பிரசாந்த்.