ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

2024ம் ஆண்டில் மூன்று முன்னணி நடிகர்களின் படங்களை வெளியிட உள்ளது லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம். அவர்களது தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படம் ஜுன் மாதம் வெளியாகும் என முதலில் அப்டேட்டை வெளியிட்டார்கள். அடுத்து அவர்களது மற்றொரு தயாரிப்பான தசெ ஞானவேல் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்' படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவித்தார்கள்.
அந்த இரண்டு ரிலீஸ் அப்டேட்டுகளுக்கு முன்பாக அவர்களது இன்னொரு தயாரிப்பான 'விடாமுயற்சி' படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள். அஜித் வேகமாக டிரைவிங் செய்யும் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில், யு-டியுப் சேனல்களில் பேசு பொருளானது.
ரஜினி, கமல் படங்களுக்கு புதிய போஸ்டர்களுடன் கூடிய அப்டேட்டை வெளியிட்டார்கள். அதுபோல அஜித்தின் 'விடாமுயற்சி' படத்திற்கு புதிய போஸ்டருடன் வெளியீடு பற்றிய அறிவிப்பை வெளியிடுவார்களா என அஜித் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.