துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
“மரண மாஸ், கொல மாஸ், தெறி மாஸ்” என இந்தக் காலத்தில் அதிகம் உச்சரிக்கப்படும் சில பாராட்டு வார்த்தைகள். அதில் ஒரு வார்த்தையான 'மரண மாஸ்' என்பதையே படத்தின் தலைப்பாக வைத்துவிட்டார்கள். ஆனால், இங்கல்ல, மலையாளத்தில்.
மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவரான டொவினோ தாமஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை சிவபிரசாத் இயக்குகிறார். பாசில் ஜோசப், ராஜேஷ் மாதவன், சிஜு சன்னி, சுரேஷ் கிருஷ்ணா மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
டொவினோ தாமஸ் தற்போது நடித்து வரும் படத்தின் தலைப்பு சமீபத்தில் சர்ச்சையில் சிக்கியது. அவருடைய ஒரு படத்திற்கு 'நடிகர் திலகம்' என தலைப்பு வைத்திருந்தார்கள். சிவாஜி கணேசன் ரசிகர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அத்தலைப்பை 'நடிகர்' என மாற்றினார்கள். சிவாஜி மகன் பிரபுவின் வேண்டுகோளை ஏற்று அவரையே புதிய தலைப்பை அறிவிக்க அழைத்திருந்தார்கள்.
மலையாளத்தில் அழகான தலைப்புகளைத்தான் வைப்பார்கள். விஜய் படங்கள் அங்கு நன்றாக ஓடுவதால் அங்கும் இந்த 'மாஸ்' டிரெண்ட் தாக்கம் வந்துள்ளது. அடுத்து 'கொல மாஸ், தெறி மாஸ்' தலைப்புகளை இங்கு யாராவது பதிவு செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.