'ஜனநாயகன்' டிரைலர் : எதிர்பார்ப்புகள் என்ன ? | தமிழில் முதல் வெற்றியைப் பெறுவாரா பூஜா ஹெக்டே ? | இன்று ஒரே நாளில் மூன்று முக்கிய வெளியீடுகள் | சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் |

தமிழ் சினிமாவில் ஆக்ஷன் நிறைந்த கமர்ஷியல் படங்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தவர் ஹரி. தற்போது விஷால் நடிப்பில் ‛ரத்னம்' என்ற படத்தை இயக்கி உள்ளார். சமீபத்தில் இவர் அளித்த ஒரு பேட்டியில் லோகேஷ் கனகராஜை பாராட்டி உள்ளார்.
அதாவது லோகேஷ் படம் என்றாலே அதில் ‛எல்சியூ' எனப்படும் ‛லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ்' இடம் பெறும். இதுபற்றிய கேள்விக்கு ஹரி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது : ‛சிங்கம் 3 படத்திலேயே இதுபற்றி நான் யோசித்து இருக்கிறேன். அதாவது ‛சிங்கம்' சூர்யாவும், ‛சாமி' விக்ரமும் விமானத்தில் சந்திப்பது போன்றும், அவர்களுக்கு இடையே சில உரையாடல்களையும் யோசித்து வைத்திருந்தேன். ஆனால் இதுபற்றி சம்பந்தப்பட்ட நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என பலரிடமும் பேசி சம்மதம் பெறணும். அது பெரிய விஷயமாக இருந்ததால் என்னால் செய்ய முடியவில்லை. நான் செய்யாததை இப்போது லோகேஷ் சிறப்பாக செய்து வருகிறார் என்றார்.