படப்பிடிப்பில் அசவுகரியம்: ராதிகா ஆப்தே வேதனை | 2025 இந்தியாவின் முதல் நாள் ஓபனிங் : முதலிடத்தில் 'கூலி' | 'அகண்டா 2' தந்த அதிர்ச்சியில் தெலுங்கு சினிமா | 'டைம்' ரொம்ப முக்கியம்: சண்முக பாண்டியன் ‛பளீச்' | நவரத்தினம், வாலி, லவ்வர் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: திரையரங்கையே கதைக்களமாக்கி, கலையுலகில் புதுமை படைத்த ஆர் பார்த்திபனின் “ஹவுஸ் புல்” | சாராவை தவறான நோக்கத்தில் கட்டிப்பிடிக்கவில்லை : பாலிவுட் நடிகர் ராகேஷ் பேடி விளக்கம் | தர்மேந்திராவின் கடைசி படம் ஆங்கில புத்தாண்டில் ரிலீஸ் | ‛பார்டர் 2'வில் வருண் தவான் நடிப்பிற்கு பாராட்டு தெரிவித்த பரம்வீர் சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் குடும்பத்தினர் | மம்முட்டி நடிக்க வேண்டிய படத்தில் ஜீவா |

ஹரி இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் ரத்னம் படம் ஏப்ரல் 26ம் தேதி திரைக்கு வருகிறது. பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்திருக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். ஆக்ஷன் கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விஷால் அளித்த ஒரு பேட்டியில், சமீபத்தில் நடைபெற்ற வரலட்சுமி சரத்குமாரின் நிச்சயதார்த்தம் குறித்து அவரிடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, வரலட்சுமியை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன் என்று கூறியுள்ளார். மேலும், தமிழை தாண்டி தெலுங்கு சினிமாவிலும் அவருக்கு ஒரு பெரிய மார்க்கெட் உள்ளது. திமிரு படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் நடிப்பை பார்த்து அசந்து போன நான், சமீபத்தில் ஹனுமன் படத்தில் வரலட்சுமியின் நடிப்பை பார்த்தும் வியந்து போனேன். அந்த அளவுக்கு சிறப்பாக நடித்திருந்தார். அவர் தன்னுடைய சினிமா கேரியரை தாண்டி வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்வது மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்திருக்கிறார் விஷால்.




