படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

மலையாள சினிமாவில் சிறிய பட்ஜெட்டில் தயாராகும் படங்கள் அதன் கதை, திரைக்கதை உருவாக்கத்தால் மிகப்பெரிய வெற்றி பெற்று விடும். அப்படி சமீபத்தில் வெற்றி பெற்ற படம் 'மஞ்சும்மேல் பாய்ஸ்'. கடந்த பிப்ரவரி மாதம் 23ம் தேதி வெளியாகி கேரளம், தமிழகம், ஆந்திரா, தெலுங்கானாவில் வசூலில் சக்கைபோடு போட்டது. சுமார் 20 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம், உலகளவில் 235 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
கொடைக்கானல் குணா குகையில் விழுந்தவரை, நண்பர்கள் எப்படி மீட்டார்கள் என்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படத்தின் கதை தமிழ்நாட்டில் நடப்பதாலும், கமல்ஹாசனின் 'குணா' படத்தை நினைவூட்டியதாலும் தமிழ் ரசிகர்களுக்கும் பிடித்தமான படமானது. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு கமல்ஹாசன், ரஜினிகாந், தனுஷ், விக்ரம் உள்ளிட்ட பிரபலங்கள், படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டினர்.
இந்த நிலையில், இப்படம் வருகிற மே 5ம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்கில் தவறவிட்டவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. கேரளா மற்றும் வெளிநாடுகளில் இன்னும் தியேடட்டர்களில் ஓடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.