துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
சிவகார்த்திகேயன், விஜய், ரஜினி என தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களின் படங்களை இயக்கியுள்ளார் நெல்சன் திலீப்குமார் . இந்த நிலையில் நெல்சன் தற்போது புதிதாக பிலாமென்ட் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கியதாக அறிவித்துள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டதாவது, " நான் எனது 20 வயதில் மீடியா பயணத்தை தொடங்கினேன். இதில் நிறைய வெற்றி, தோல்வியை கடந்து வந்தேன். அந்த சமயத்தில் எனக்கென்று தயாரிப்பு நிறுவனம் தொடங்க வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. இப்போது இது நிறைவேறியுள்ளது. இந்த நிறுவனத்தின் லட்சியம் ரசிகர்களுக்கு நல்ல படங்களை தந்து சந்தோஷப்படுத்துவது. மேலும், இந்நிறுவனத்தின் முதல் பட அறிவிப்பு வருகின்ற மே 3ம் தேதி அன்று வெளியாகும் " என குறிப்பிட்டுள்ளார்.