பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! |
பவன் கல்யாண் முதன்முறையாக நடிக்கும் பீரியட் ஆக்ஷன் படம் 'ஹரி ஹர வீர மல்லு'. ஏ.எம்.ரத்னம் சிறு இடைவெளிக்கு பிறகு சூர்யா புரொடக்ஷன்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளார். 'காஞ்சே', 'கௌதமிபுத்ர சட்டகர்ணி' மற்றும் 'மணிகர்னிகா' போன்ற படங்களை இயக்கிய கிரிஷ் ஜகர்லமுடி இயக்கி உள்ளார்.
பவன் கல்யாண் உடன் நிதி அகர்வால், பாபி தியோல், சுனில், நோரா பதேஹி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இப்படத்திற்கு இசை மற்றும் பின்னணி இசையமைக்கிறார். ஞானசேகர் விஎஸ் மற்றும் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்கள்.
17ம் நூற்றாண்டில் நடக்கும் ஆக்ஷன் அட்வென்சர் கதை என்பதால் அதற்கேற்றவாறு சார்மினார், செங்கோட்டை மற்றும் மச்சிலிப்பட்டினம் துறைமுகம் போன்ற பிரம்மாண்டமான செட்களை அமைத்து படமாக்கி வருகிறார்கள்.
இந்த படத்தின் பணிகளை விரைந்து முடிக்க தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்தினத்தின் மகனும், 'படையப்பா', 'நட்புக்காக' போன்ற படங்களின் எழுத்தாளரும், 'எனக்கு 20 உனக்கு 18', 'நீ மனசு எனக்கு தெலுசு', 'ஆக்ஸிஜன்' போன்ற படங்களை இயக்கியவருமான இயக்குநர் ஜோதி கிருஷ்ணா இரண்டாவது யூனிட்டின் இயக்குனராக பொறுப்பேற்றுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், "படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை கிரிஷ் ஜகர்லமுடி மேற்பார்வையில் ஜோதி கிருஷ்ணா முடிக்க உள்ளார். முந்தைய கமிட்மென்ட் மற்றும் படப்பிடிப்பில் எதிர்பாராத தாமதம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. படம் 2024ஆம் ஆண்டின் இறுதியில் வெளியாகும்" என்று கூறப்பட்டுள்ளது.