சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் ஓட்டளிப்பதற்காக நடிகர் விஷால் தனது வீட்டிலிருந்து ஓட்டுச்சாவடிக்கு சைக்கிளில் சென்று ஓட்டளித்தார். தன்னிடமிருந்த அனைத்து கார்களையும் விற்று விட்டதாகவும் விளக்கமும் கூறியிருந்தார். இந்த நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் மும்பையில் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டார்.
ஒரு நாள் மாலை படப்பிடிப்பு முடிவடைந்ததும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் தவிர்ப்பதற்காக காரில் கிளம்புவதற்கு பதிலாக தனது உதவியாளருடன் ஒரு ஆட்டோ ரிக்ஷா ஒன்றில் ஏறி தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார் ஸ்ருதிஹாசன். ஆட்டோவில் பயணிக்கும் வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ள ஸ்ருதிஹாசன், “நீங்கள் வீடு திரும்புவதற்கான ஒரு வழியை எப்போதும் கண்டுபிடிக்கும்போது அது மற்ற விஷயங்களை விட சுவாரஸ்யமானதாக இருக்கும். மும்பை வாழ்க்கை” என்று குறிப்பிட்டுள்ளார்.