மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? |
லைகா நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக இருந்தவர் ராஜு மகாலிங்கம். பின்னர் அதிலிருந்து வெளியேறி நடிகர் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதாக இருந்தபோது ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஆனால் ரஜினி அரசியல் வருகையை தவிர்த்து விட்டதை அடுத்து ரஜினி மக்கள் மன்ற பணிகளும் கிடப்பில் போடப்பட்டது.
இந்த நிலையில் ராஜு மகாலிங்கம் சென்னையில் ஒரு புதிய வீடு கட்டி கிரகப்பிரவேசம் நடத்தியுள்ளார். அப்போது ரஜினிக்கும் அவர் அழைப்பு விடுத்த நிலையில் படப்பிடிப்பில் இருந்ததால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத ரஜினி, சில தினங்களுக்கு முன்பு அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
இது குறித்த புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராஜு மகாலிங்கம். ஒரு பதிவும் போட்டுள்ளார். அதில், கண்டிப்பாக ஒருநாள் உங்கள் வீட்டுக்கு வருகிறேன் என்று வாக்குறுதி அளித்தவர், தான் சொன்னது போலவே எங்கள் வீட்டிற்கு வருகை தந்தார். அவரது வருகையை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. நன்றி தலைவா என்று பதிவிட்டுள்ளார் ராஜு மகாலிங்கம்.