விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" |

'ஆர்ஆர்ஆர்' படத்திற்கு பிறகு ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் படம் 'தேவரா'. இந்த படத்தின் படப்பிடிப்பு முழு வேகத்தில் நடந்து வருகிறது. கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ஜான்வி கபூர் நாயகியாக நடிக்கிறார். மற்றொரு பாலிவுட் நட்சத்திரமான சைப் அலிகான் வில்லனாக நடிக்கிறார். பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், ஷைன் டாம் சாக்கோ மற்றும் நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். என்டிஆர் ஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் சார்பில் நந்தமுரி கல்யாண் ராம் மிக்கிலினேனி சுதாகர் மற்றும் ஹரி கிருஷ்ணா தயாரிக்கிறார்கள்.
இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தின் முதல் பாகமான 'தேவரா பார்ட் 1' தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் அக்டோபர் 10ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. என்டிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு 'பியர் சாங்' என்ற பாடல் வெளியிடப்பட்டது. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் அனிருத் பாடியிருக்கிறார். சந்தோஷ் வெங்கி கன்னடம் மற்றும் மலையாளத்தில் பாடியிருக்கிறார். பாடலை தெலுங்கில் சரஸ்வதி புத்ரா ராமஜோகய்யா சாஸ்திரி, தமிழில் விஷ்ணு எடவன், ஹிந்தியில் மனோஜ் முண்டாஷிர், கன்னடத்தில் வரதராஜ் மற்றும் மலையாளத்தில் மான்கொம்பு கோபாலகிருஷ்ணன் ஆகியோர் எழுதியுள்ளனர்.