மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
'விடுதலை' படத்தின் மூலம் ஹீரோவாகி விட்ட சூரி நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கிறது 'கருடன்' படம். இதனை துரை செந்தில்குமார் இயக்கி உள்ளார். இயக்குனர் வெற்றிமாறன் தயாரித்துள்ளார். சூரியுடன் சசிகுமார், ரேவதி சர்மா, ஷிவதா, சமுத்திரகனி மைம்கோபி உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் வருகிற 31ம் தேதி வெளியாகிறது.
தற்போது படக்குழுவினர் புரமோஷன் டூர் கிளம்பி உள்ளனர். அந்த வகையில் நேற்று கோவை சென்றனர். அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்த சூரி கூறியதாவது : விடுதலை படத்திற்கு பிறகு ரசிகர்கள் என்னை காமெடியன் என்பதை தாண்டி வேறொருவனாக பார்க்க தொடங்கி விட்டார்கள். இந்த படத்திலும் அப்படித்தான். விடுதலை படத்தில் கஷ்டப்பட்டு நடித்ததை போன்று இந்த படத்திலும் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறேன். அதற்கான பலன் கண்டிப்பாக கிடைக்கும்.
தற்போது தொடர்ந்து கதை நாயகனாக நடிக்கத்தான் வாய்ப்புகள் வருகிறது. காமெடியன் வாய்ப்புகள் வருவதில்லை. காமெடி கதாபாத்திரங்களை நடிக்கும்பொழுது அதற்கான காட்சிகளை மட்டும் நடித்துவிட்டு சென்று விடுவேன். ஆனால் நாயகனாக நடிப்பதால் பொறுப்பு கூடி உள்ளது. கதாநாயகனாக வெற்றிமாறன் அளித்த இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு நிறைய உழைக்கிறேன். சினிமாவில் எந்த இடமும் காலியாக இருக்காது. அந்தந்த இடத்திற்கு ஆட்கள் வந்து கொண்டே இருப்பார்கள். சினிமா அந்த இடத்திற்கான ஆளை தேர்வு செய்து விடும். என்றார்.