பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
தமிழ் சினிமாவில் குடும்பப் பாங்கான கதாநாயகி எனப் பெயரெடுத்தவர் கீர்த்தி சுரேஷ். கிளாமர் ஆன ஆடைகளை அவர் திரைப்படங்களில் கூட அணிந்ததில்லை. இந்நிலையில் ஹிந்தியில் அவர் அறிமுகமாகி உள்ள 'பேபி ஜான்' படத்தில் முத்தக் காட்சியில் நடித்துள்ளார் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழில் அட்லி இயக்கத்தில், விஜய், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த 'தெறி' படம்தான் ஹிந்தியில் 'பேபி ஜான்' என ரீமேக் ஆகிறது. வருண் தவான், வாமிகா கபி, ஜாக்கி ஷராப் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
ஹிந்தியில் கிளாமர், கவர்ச்சி, முத்தக் காட்சி என்று நடிக்க சம்மதித்தால் மட்டுமே வாய்ப்புகள் கிடைக்கும். அதனால்தான் கீர்த்தியும் அப்படி நடிக்க சம்மதித்திருப்பார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.