தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பாரதிராஜா இயக்கிய ‛அலைகள் ஓய்வதில்லை' படம் மூலம் வில்லனாக தமிழக ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் தியாகராஜன். அதன்பிறகு, மம்பட்டியான் படத்தில் நடிப்பில் அசத்தியிருந்தார். 80களில் தவிர்க்க முடியாத நடிகராகவும் ஆனார். தொடர்ந்து, பாயும் புலி, கொம்பேரி மூக்கன், நீங்கள் கேட்டவை, பூவுக்குள் பூகம்பம் என்று ரசிகர்கள் மனதில் நின்றார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் நடித்து வந்தவர், ஆணழகன், சேலம் விஷ்ணு, ஷாக், பொன்னர் சங்கர் போன்ற படங்களை பிரமாண்டமாக இயக்கினார். தற்போது ‛பி டி சார்' படத்தில் ஹிப்ஹாப் ஆதியுடன், காலேஜ் சேர்மன், என்ற நெகடிவ் ரோலில் நடித்திருந்தார். படத்தில் நடிகை அனிகா சுரேந்தரை இவர் பாலியல் துன்புறுத்தல் செய்வது போல சில காட்சிகள் எடுக்கபட்டதாம். ஆனால் அவ்வாறு நடிப்பதில் தியாகராஜன் பெரும் தயக்கம் காட்டியதாக கூறப்படுகிறது.
இந்த வயதில், ஒரு சிறு குழந்தையை வைத்து இப்படி ஒரு காட்சி நடிக்க சொன்னால், அது பொதுமக்கள் மத்தியில் சரியாக இருக்குமா, தவறாக என்னை சித்தரித்து விமர்சனம் செய்ய மாட்டார்களா என்றெல்லாம் தயங்கி, தன் நட்பு வட்டத்தில் பேசி உள்ளார். ஒரு காட்சியில், ஆதி இவரை கன்னத்தில் அறைவது போல படத்தில் உள்ளது. ஆனால் அந்த காட்சிக்கு இயக்குனர் டூப் போட்டு எடுத்ததாக சொல்கிறார். தியாகராஜன் இப்படி நடிக்க தயங்கினாலும், படம் பார்த்த பலரும், அவரது நடிப்பை வெகுவாக பாராட்டுகின்றனர்.