துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
பிரபல நடிகை கேப்ரில்லா சார்ல்டன். குழந்தை நட்சத்திரமாக சின்னத்திரையிலும், சினிமாவிலும் அறிமுகமானார். பிக்பாஸ் என்ட்ரிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீசன் 2வில் ஹீரோயினாக நடித்தார். தற்போது சீரியல்களில் ஹீரோயினாக நடிக்க கேப்ரில்லாவுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
அண்மையில் கேப்ரில்லா அளித்துள்ள பேட்டியில் சிறு வயதில் நடிக்க வந்த புதிதில் தனக்கு நிகழ்ந்த மோசமான சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார். அதில், 'நான் 10ம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது என்னுடைய புகைப்படத்தை யாரோ தவறாக மார்பிங் செய்து வெளியிட்டார்கள். அந்த புகைப்படத்தில் இருப்பது நானே கிடையாது. ஆனால், புதிதாக பார்ப்பவர்கள் அது நான் தான் என்று நினைப்பார்கள். அந்த சமயத்தில் நான் ரொம்பவே கஷ்டப்பட்டேன். பள்ளியில் எல்லோரும் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார்கள். இதனால் மூன்று நாட்கள் பள்ளிக்கு செல்லவில்லை. அந்த சம்பவத்திலிருந்து வெளியே வருவதற்கே எனக்கு சில நாட்கள் ஆனது' என்று கூறியுள்ளார்.