திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
கன்னடத்தில் அறிமுகமாகி பின்னர் தெலுங்கு, தமிழ் மொழிகளிலும் படம் இயக்கியவர் பி.விட்டலாச்சார்யா. சொந்த திரைப்பட நிறுவனத்தை நிறுவி, 1953ல் 'இராச்சிய லெட்சுமி' எனும் கன்னடத் படத்தை தயாரித்து, இயக்கி சினிமாவில் அறிமுகமானார். என்.டி.ராமராவை கதாநாயகனாகக் கொண்டு 19 தெலுங்கு படங்களை இயக்கியுள்ளார். இவரது தெலுங்கு மற்றும் கன்னட படங்கள் தமிழ் மொழியில், மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. அவைகள் இங்கு பெரும் வெற்றி பெற்றது.
ஆரம்பத்தில் குடும்ப பாங்கான சமூக படங்களை இயக்கி வந்த விட்டலாச்சார்யா அதன்பிறகு மாயாஜால படங்களுக்கு மாறினார். ஜெகன்மோகினி, காந்தர்வ கன்னி உள்பட அவர் இயக்கிய மாயாஜால படங்கள் அனைத்தும் கன்னடத்தில் தயாராகி பின்னர் மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டது. சினிமாவில் தொழில்நுட்பங்கள் வளராத காலத்திலேயே ஒளிப்பதிவாளரையும், கலை இயக்குனரையும் வைத்துக் கொண்டு சினிமாவில் மாயாஜாலம் காட்டினார்.
30 படங்களை இயக்கிய விட்டலாச்சார்யா எந்த ஹீரோக்களையும் தேடிச் சென்றதில்லை. அவர் படத்தில் நடிக்க ஹீரோக்கள் காத்திருந்தார்கள். ஒரு முறை தன்னிடம் வாய்ப்பு கேட்ட ஒரு பெரிய ஹீரோவை வைத்து மாயாஜால படம் ஒன்றை இயக்கினார். வலிந்து வாய்ப்பு கேட்ட அந்த ஹீரோ இது மாயாஜால படம்தானே என்று அலட்சியமாக கருதி தினமும் படப்பிடிப்புக்கு தாமதமாக வந்தார். உடனே அவரை படத்திலிருந்து அதிரடியாக நீக்கினார் விட்டலாச்சார்யா.
பாதி படம் முடிந்திருந்த நிலையில் தன்னை தவிர்த்து விட்டு அவரால் படம் இயக்க முடியாது. அப்படி இயக்கினால் தான் நடித்த போர்ஷன்களை திரும்ப படமாக்க வேண்டியது வரும் அது பெரிய நஷ்டத்தை கொடுக்கும் என்ற அந்த ஹீரோ நம்பினார்.
ஆனால் தொடர்ந்து விட்டலாச்சர்யா படப்பிடிப்பை அந்த ஹீரோ இல்லாமலேயே வேகமாக நடத்தினார். இதை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த ஹீரோ எப்படி இது சாத்தியம் என்று விசாரித்த போதுதான். அந்த படத்தில் இளவரசாக நடித்த ஹீரோ ஒரு முனிவரின் சாபத்தால் எருமை மாடாக மாறிவிட்டதாக கதையை மாற்றி மீதி கதையை எருமை மாட்டை கொண்டு எடுத்துக் கொண்டிருப்பதாக ஹீரோவுக்கு தகவல் கிடைத்தது. தவறை உணர்ந்த ஹீரோ ஓடிச் சென்று விட்டலாச்சாயரிடம் மன்னிப்பு கேட்டு பிறகு ஓழுங்காக நடித்துக் கொடுத்தார். இன்று அவரது 25வது நினைவு நாள்.