5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
நாக் அஸ்வின் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், பிரபாஸ், தீபிகா படுகோனே, திஷா பதானி, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'கல்கி 2898 ஏடி'. இப்படம் ஜுன் 27ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. அடுத்த வாரம் இப்படத்தின் டிரைலரை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
இப்படத்திற்கான வியாபாரம் கடந்த சில வாரங்களாகவே பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது தெலுங்கு மாநிலங்களின் வியாபாரம் முடிந்துவிட்டதாக டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இப்படத்தின் வினியோக உரிமை சுமார் 150 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாம். பிரபாஸ் நடித்த படங்களிலேயே இதுதான் அதிகத் தொகை என்கிறார்கள்.
பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த 'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு அவரது படங்கள் அந்த அளவிற்கு வசூலைக் குவிக்கவில்லை. ஆனால், 'கல்கி 2898 ஏடி' படம் வசூலில் சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதனால்தான் இவ்வளவு தொகைக்கு விற்கப்பட்டுள்ளதாம்.