ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் மயோசிடிஸ் எனும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார். தற்போது அதிலிருந்து மீண்டு, மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி வருகிறார். அவர் கைவசம் இரண்டு படங்கள் உள்ளன. அவ்வப்போது தன்னை புத்துணர்ச்சியாக வைத்து கொள்ள சுற்றுலா செல்லும் சமந்தா இப்போது கோவை, ஈஷா மையத்திற்கு சென்றுள்ளார். அங்கு தியானம் செய்வது உள்ளிட்ட சில போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
அதன் உடன், ‛‛நம்மில் பலர் குரு அல்லது வழிகாட்டியை தேடுகிறோம். உங்கள் வாழ்வை ஒளிரச் செய்பவர்களை கண்டால் அது பாக்கியம். ஞானம் பெற நீங்கள் தான் இந்த உலகில் அதை தேட வேண்டும். உங்கள் மீது பல விஷயங்கள் திணிக்கப்படுவதால் ஞானத்தை பெறுவது சாதாரணமானது அல்ல, அதற்காக உழைக்க வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார் சமந்தா.