துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
துரை செந்தில்குமார் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், கதையின் நாயகனாக சூரி நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் சசிக்குமார், உன்னி முகுந்தன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் 'கருடன்'. இப்படம் 40 கோடி வசூலைக் கடந்து 50 கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
சமீபத்தில் இப்படத்தின் சக்சஸ் மீட்டையும் கொண்டாடினார்கள். படத்தின் வசூல் குறித்து படக்குழுவினர் அனைவருமே மகிழ்வுடன் இருக்கிறார்கள். ஆனாலும், ஒரு வியாபாரம் இன்னும் முடியாதது அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு வரவேற்பைப் பெற்ற இப்படத்தின் சாட்டிலைட் டிவி உரிமை, ஓடிடி உரிமை இன்னும் வாங்கப்படாமல் இருக்கிறதாம்.
சில முன்னணி ஓடிடி நிறுவனங்கள் இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டை அதற்குள் முடித்துவிட்டார்களாம். எனவே, கூடுதல் பட்ஜெட் ஒதுக்கி இந்தப் படத்தை வாங்க முடியவில்லையாம். திரையரங்கிலும், விமர்சகர்களிடத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தை எந்த ஓடிடி வாங்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.