தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தெலுங்கு திரையுலகத்தின் முன்னணி தயாரிப்பாளரான அஸ்வினி தத் தயாரிப்பில், நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள பான் இந்தியா படம் 'கல்கி 2898 ஏடி'. இப்படத்தின் தயாரிப்பாளரான அஸ்வினி தத் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதையடுத்து சந்திரபாபு நாயுடுவின் கனவான அமரவாதி நகரை ஆந்திராவின் தலைநகராக மாற்ற வேலைகள் ஆரம்பமாகி உள்ளன. அதற்கு பெருமை சேர்க்கும் விதத்தில் அஸ்வினி தத் தயாரித்துள்ள 'கல்கி 2898 ஏடி' படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சியை அங்கு நடத்தத் திட்டமிட்டிருந்தாராம்.
ஆனால், படத்தின் நாயகனான பிரபாஸ், அமராவதியில் நடத்த வேண்டாம், ஐதராபாத்திலேயே நடத்துங்கள். அங்கு நடத்தினால் தேவையற்ற அரசியல் சர்ச்சைகள் வரும் என்று கூறிவிட்டாராம். எனவே, அமராவதியில் நடத்தவிருந்த நிகழ்ச்சியை ஐதராபாத்திற்கு மாற்றிவிட்டார்களாம்.
இது குறித்து விசாரித்த போது, அங்குள்ள அடிப்படை வசதிகள், மழைக்காலம் என காரணம் சொல்வதாகத் தகவல்.