தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் |

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛இந்தியன் 2'. சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். ஊழல் பின்னணியை வைத்து இந்தப்படம் தயாராகி உள்ளது. அடுத்தமாதம் 12ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில் இதன் டிரைலரை வெளியிட்டுள்ளனர். 2:38 நிமிடம் ஓடும் இந்த டிரைலர் பற்றிய சிறு முன்னோட்டம்...
ஊராடா இது... என டிரைலர் துவங்குகிறது. வேலையின்மை, படிப்புக்கு ஏற்ற சம்பளம் இல்லாதது, அடிப்படை வசதிகள் இல்லாதது, ஊழல் என மக்களின் பிரச்னைகள் அடுக்கிக் கொண்டே டிரைலர் போகிறது. இதைக்கண்டு பொங்கும் சித்தார்த் இதை அடக்க இந்தியன் தாத்தாவான சேனாதிபதி கமல் வருவார் என கூறுவதும், அதன்பின் கமல் எடுக்கும் நேதாஜி பாணியிலான ஆக்ஷன்கள் தான் படம் என டிரைலரை பார்க்கும்போதே புரிகிறது.
இந்தியன் முதல் பாகத்தில் தமிழக அளவில் இருந்த சேனாதிபதியின் ஊழல் களையெடுப்பு இரண்டாம் பாகத்தில் நாடு தழுவிய அளவில் இருக்கும் என தெரிகிறது.
படத்தின் பிரதான வில்லனாக எஸ்.ஜே.சூர்யா இருப்பார் என தெரிகிறது. மறைந்த கலைஞர்கள் விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு உள்ளிட்டவர்களின் காட்சிகளும் டிரைலரில் வருகிறது. இவர்கள் தவிர போலீஸ் அதிகாரியாக பாபி சிம்ஹா, நாயகிகள் பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், நடிகர் சமுத்திரகனி, டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் வருகிறார்கள்.
‛‛இது இரண்டாவது சுதந்திர போர், காந்திய வழியில் நீங்க... நேதாஜி வழியில் நான். ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது... டாம் அண்ட் ஜெர்ரி ஆட்டம் ஆரம்பிச்சிடுச்சு...'' என கமல் பேசும் வசனங்களும், வயதான தோற்றத்தில் கமலின் விதவிதமான லுக் மற்றும் அவரின் வர்மக்கலை அட்டாக் போன்றவை ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் ஷங்கரின் பிரமாண்ட படமாக்கமும், அனிருத்தின் பின்னணி இசையும் நன்றாக உள்ளது.