மீண்டும் படம் இயக்க உள்ளேன்: பாக்யராஜ் பேட்டி | பராசக்தி பட சஸ்பென்ஸ் எது? | பிளாஷ்பேக் : ஜல்லிக்கட்டுக்கு சம்பந்தமில்லாத ஜல்லிக்கட்டு படம் | பிளாஷ்பேக்: முதல் 'ஜல்லிக்கட்டு' படம் | சண்டை காட்சியில் எஸ்.ஜே.சூர்யா படுகாயம் : கில்லர் படப்பிடிப்பு நிறுத்தம் | 'ஜனநாயகன்' பட்ஜெட் 500 கோடி: நீதிமன்றத்தில் தகவல் | விஜய் நடித்த 'உன்னை நினைத்து' காட்சிகளைப் பகிர்ந்த விக்ரமன் | ஜன.,10க்கு தள்ளிப்போகிறதா 'ஜனநாயகன்'? | 'அகண்டா 2' மாதிரி ஆகிடுமா ஜனநாயகன் | ஜனவரி 30ல் வெளியாகும் ஜீத்து ஜோசப் படம் |

தமிழில் ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா. பிரபல பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகளான இவரது திருமணம் சமீபத்தில் எளிமையாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். சமீபத்தில் தான் தங்களது திருமண நிச்சயதார்த்தத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்த காதல் ஜோடியான சித்தார்த், அதிதி ராவ் இருவரும் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அதுமட்டுமல்ல நடிகர் ஜெமினி கணேசன் மகளும் பிரபல பாலிவுட் நடிகையுமான ரேகாவும் இந்த வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது சித்தார்த், அதிதி இருவரையும் அருகில் அழைத்து வாஞ்சையுடன் இருவரையும் கைகோர்த்து அணைத்தபடி புகைப்படக்காரர்களுக்கு போஸ் கொடுத்தார் ரேகா. அதைத் தொடர்ந்து இருவரையும் சுட்டிக்காட்டி இவர்களது ஜோடி பொருத்தம் பிரமாதம் என சைகையாலேயே கூறினார் ரேகா. அதைக் கேட்டதும் அதிதி முகத்தில் அளவற்ற சந்தோசம் பொங்கியதை பார்க்க முடிந்தது. இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.