தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னட நடிகர் தர்ஷன் தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவரை கொலை செய்ய காரணமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் பவித்ரா கவுடா உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோர் இந்த கொலையில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு கன்னட திரையுலகில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு பக்கம் தர்ஷன் நடித்த வரும் படங்களின் நிலை என்ன ஆகும் என்கிற கேள்வி இருக்க, இன்னொரு பக்கம் இந்த சூழலை வியாபார நோக்கில் பயன்படுத்திக் கொள்ள திரையுலகை சேர்ந்த சிலர் முயற்சித்து வருகின்றனர். அப்படி சில இயக்குனர்கள் 'டி கேங்' மற்றும் 'கைதி நம்பர் 6106' என்கிற டைட்டில்களை தங்களது படத்திற்கு வழங்குமாறு கன்னட பிலிம் சேம்பரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதில் சமீபகாலமாக மீடியாக்களில் செய்திகளில் தர்ஷன் மற்றும் இந்த கொலையில் அவருக்கு உதவியாக ஈடுபட்ட நபர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து 'டி கேங்' என்ற பெயரில் குறிப்பிட்டு வருகிறார்கள். தற்போது இந்த பெயர் மிகப்பெரிய அளவில் பிரபலமாக உள்ளது.
இயக்குனர் ராக்கி சோம்லி என்பவர் இரண்டு வருடங்களுக்கு முன்பே 'டி கேங்' என்கிற டைட்டிலை தீர்மானித்து இந்த பெயர் வரும் விதமாக ஒரு பாடலையும் உருவாக்கி உள்ளதாக கூறி தங்களுக்கு இந்த டைட்டிலை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். அதேபோல இன்னும் சில இயக்குனர்கள் தற்போது சிறையில் உள்ள தர்ஷனுக்கு வழங்கப்பட்டுள்ள கைதி எண் 6106 நம்பரை படத்தின் டைட்டிலாக வைத்து பிலிம் சேம்பரில் பதிவதற்கு முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் தற்போது தர்ஷனின் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் இந்த இரண்டு டைட்டில்களையும் வழங்குவதற்கு கன்னட பிலிம் சேம்பர் மறுத்துவிட்டது.