துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
சின்னத்திரை தொகுப்பாளினியான பரீனா, பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் சீரியலில் நடிகையாக என்ட்ரி கொடுத்தார். அந்த தொடரில் வில்லியாக மிரட்டிய பரீனாவின் நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்தது. அதன்பிறகு சில சீரியல்களில் பரீனா நடித்தாலும் அவையெல்லாம் பெரிதாக பேசப்படவில்லை. பாரதி கண்ணம்மா சீசன் 2வும் விரைவாகவே முடித்து வைக்கப்பட்டது. அதன்பிறகு பரீனாவுக்கு சீரியல் வாய்ப்புகள் கிடைக்காததால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மட்டும் பங்கேற்று வந்தார்.
இந்நிலையில், அவருக்கு மீண்டும் சீரியல் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‛நினைத்தாலே இனிக்கும்' ஹிட் தொடரில் மீண்டும் வில்லியாக, பழிவாங்கும் பாம்பாக பரீனா என்ட்ரி கொடுத்துள்ளார். அதன் புரோமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.