திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவர் ராஜு. அவர் அறிமுகமாகும் படம் 'பன் பட்டர் ஜாம்'. 'எண்ணித்துணிக' படத்தை தயாரித்த ரெய் ஆப் ஆரோவ்ஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் சுரேஷ் சுப்ரமணியம் தயாரிக்கிறார். ராகவ் மிர்தாத் இசை அமைக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா ஒளிப்பதிவு செய்கிறார். ஆத்யா பிரசாத் மற்றும் பவ்யா திரிகா நாயகிகளாக நடிக்கிறார்கள். சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சார்லி. மைக்கேல் தங்கதுரை மற்றும் வீஜே பப்பு ஆகியோரும் நடிக்கிறார்கள்.
படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் 30 அடி உயர பேனர் மூலம் வெளியிடப்பட்டது. இதுகுறித்து இயக்குனர் ராகவ் மிர்தாத் கூறும்போது, “வழக்கமான போஸ்டர் பாணியில் இல்லாமல், முழுக்க முழுக்க கைகளாலேயே வரைந்து, ஓவிய அமைப்பில் இந்த போஸ்டரை வடிவமைத்தோம். பல்வேறு கால கட்டத்தில் உலக வரலாற்றில் நடந்த போர் காட்சிகளை வரைந்து, நடு நாயகமாக, படத்தின் நாயகன் ராஜு அமர்ந்து “பன் பட்டர் ஜாம்” சாப்பிடுவதுபோல் வரைந்திருக்கிறோம். அவர்மேல் அம்புகள் துளைக்கப்பட்டும், வல்லூறுகள் அவர் மீது அமர்ந்து அவர் சதையை உண்ணுவது போலவும், ஆனாலும் நெற்றியில் வழியும் ரத்தத்தோடு, புன்னகை மாறாமல் ராஜு அமர்ந்து “பன் பட்டர் ஜாம்” சாப்பிடுவது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
வாழ்வில் எத்தனையோ பிரச்னைகள் நம்மை சுற்றி இருந்தாலும், அதை இதயத்தில் ஏற்றிக் கொண்டு வருந்தாமல், அந்தந்த கணத்தை கடந்தபடி சந்தோஷமாக சென்றால் வாழ்வு “பன் பட்டர் ஜாமை” போல் இனிக்கும் என்கிற ஜாலியான கருத்தை இந்த போஸ்டரில் சொல்லியிருக்கிறோம். என்றார்.