பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் |

காமெடி கேரக்டர்களில் நடித்து வந்தாலும் யோகி பாபு கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். சிம்பு தேவன் இயக்கத்தில் அவர் கதை நாயகனாக நடித்துள்ள 'போட்' படம் அடுத்து வெளிவர இருக்கிறது. இந்த நிலையில் அவர் மீண்டும் கதை நாயகனாக நடிக்கும்படம் 'கான்ஸ்டபிள் நந்தன்'. இந்த படத்தின் பணிகள் நேற்று முன்தினம் திருவண்ணாமலை கோவிலில் பூஜையுடன் தொடங்கியது.
யோகிபாபு ஏற்கனவே பல படங்களில் கான்ஸ்டபிளாக நடித்திருந்தபோதும் கதை நாயகனாக நடிப்பது இதுவே முதல்முறை. படத்தை சங்கர் பிக்சர்ஸ் சார்பில் டி.சங்கர் திருவண்ணாமலை தயாரிக்கிறார். அறிமுக இயக்குநர் பூபால நடேசன் இயக்குகிறார்.
படம் பற்றி இயக்குனர் கூறும்போது “நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களைத் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட தயாரிப்பாளர்களைக் கண்டுபிடிப்பது ஒரு வரப்பிரசாதம். அப்படியான சங்கர், என் கதையைத் தயாரிக்க முன்வந்ததற்கு மகிழ்ச்சி. பார்வையாளர்கள் மற்றும் வர்த்தக வட்டாரத்தின் விருப்பமான யோகிபாபு போன்ற ஒரு தலைசிறந்த நடிகருடன் பணிபுரிவது மகிழ்ச்சி அளிக்கிறது.
நகைச்சுவை நடிகராக அவரது வாழ்க்கை வெற்றியின் உச்சத்தைத் தொட்டபோது, அவர் தைரியமாக கதாநாயகனாக அடியெடுத்து வைத்துள்ளார். அவர் கதாநாயகனாக நடித்தப் பல படங்கள் அவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்திருக்கிறது. 'கான்ஸ்டபிள் நந்தன்' திரைப்படமும் அவரது வாழ்க்கையில் மற்றொரு மைல்கல்லாக இருக்கும். கதையில் யோகிபாபுவுக்கு எதிராக ஒரு வலுவான கதாபாத்திரம் இருக்கிறது. அதில் திறமையான நடிகர் ஒருவரை விரைவில் தேர்ந்தெடுத்து அறிவிப்போம்” என்றார்.