தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி ஒரு பக்கம் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டு இன்னொரு பக்கம் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு ஹோட்டலில் தங்கி இருந்த ஹிப் ஹாப் ஆதியை ஆஸ்திரேலியாவிவை சேர்ந்த ரசிகர் ஒருவர் நேரில் சந்தித்தபோது சமீபத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையை வென்றதற்காக தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
குழம்பிப்போன ஆதி, சார் நீங்கள் யாரோ என்று என்னை தவறாக நினைத்து விட்டீர்கள்" என அவரிடம் கூறியதற்கு, "இல்லை நான் சரியாகத் தான் சொல்கிறேன் நீங்கள் இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா தானே" என்று கூறியுள்ளார். அப்படி அவர் தன்னை ரோஹித் சர்மாவாக நினைத்துக் கொண்டு நன்றி சொன்ன பிறகு அவரிடம் தன்னை பற்றி எதுவும் கூறாமல் அமைதியாகிவிட்டாராம் ஆதி.
சம்பந்தப்பட்ட நபர் தன்னை பாராட்டும்போது எடுக்கப்பட்ட வீடியோவுடன் என்ன நடந்தது என்பது குறித்து நகைச்சுவையுடன் அந்த கலாட்டாவை விவரிக்கும் வீடியோ ஒன்றையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள ஹிப் ஹாப் ஆதி, நான் என்ன, பார்ப்பதற்கு ரோஹித் சர்மா மாதிரியா இருக்கிறேன் ?” என்று கேட்டுள்ளார்.