போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

ஜில்லா, தர்பார், பாபநாசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நிவேதா தாமஸ். தற்போது அவர் 35 என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். அவருடன் பாக்யராஜ், கவுதமி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. இதையடுத்து இந்த படம் திரைக்கு வர இன்னும் 35 நாட்கள் இருக்கும் நிலையில், அது குறித்த ஒரு தகவலை தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருக்கிறார் நிவேதா தாமஸ்.
அந்த பதிவில், எனது படம் வெளியாக இன்னும் 35 நாட்களே உள்ளன. அந்த படத்தை பார்க்க சின்ன குழந்தை போன்று ஆர்வத்தில் காத்திருக்கிறேன். எனது முகத்தில் 35 படம் சிரிப்பை வர வைத்தது. நீங்கள் அனைவரும் இந்த படத்தை ஆவலுடன் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். இது எனது படம் என்று நான் பெருமையாக கூறுகிறேன். ஆனபோதிலும் இன்னும் 35 நாட்களுக்கு பிறகு இது உங்கள் படமாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார் நிவேதா தாமஸ்.
குட்டி ஸ்டோரி என்ற தலைப்பில் அவர் பதிவிட்டுள்ள இந்த பதிவு வைரலானது.