தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா |
ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடித்த 'இந்தியன் 2' படம் நேற்று உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியானது.
பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இந்தப் படத்திற்கு நேற்று கலவையான விமர்சனங்கள் வெளிவந்தன. படத்தின் நீளம் மூன்று மணி நேரம் என்பது பற்றித்தான் பலரும் குறிப்பிட்டுள்ளார்கள். இருந்தாலும் படத்தைப் பார்க்கும் ஆர்வம் ரசிகர்களிடம் குறையவில்லை. இன்றும், நாளையும் விடுமுறை தினம் என்பதால் முன்பதிவும் சிறப்பாகவே இருக்கிறதாம்.
நேற்றைய முதல் நாள் வசூல் மட்டும் உலக அளவில் சுமார் 60 கோடி வந்திருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வார இறுதி வசூல் 200 கோடியைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்கிறார்கள். இன்னும் இரண்டு வாரங்களுக்கு வேறு பெரிய படம் எதுவும் வரவில்லை என்பதால் வசூல் பாதிப்பு இருக்காது என்றும் சொல்கிறது பாக்ஸ் ஆபீஸ் வட்டாரம். சில விஷயங்களை படத்தில் தவிர்த்திருந்தால் பெரும் வசூலைக் குவித்திருக்கும் என்பதுதான் பலரது ஒருமித்த கருத்தாகவும் உள்ளது.