மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் தனது 48வது படத்தில் நடிக்கவுள்ளார் இதனை ராஜ்கமல் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக அறிவித்து பல மாதங்கள் கடந்த நிலையில் இன்னும் இது படப்பிடிப்பை நோக்கி நகரவில்லை. தற்போது ஒரு சில காரணங்களால் இந்த படத்தை தயாரிப்பதில் இருந்து ராஜ்கமல் புரொடக்சன்ஸ் நிறுவனம் விலகுகிறது .
இதனால் இந்த படத்தை சிம்புவே தான் புதிதாக ஆத்மேன் சிலம்பரசன் எனும் புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தயாரிக்கின்றார் இதற்கு ரூ. 200 கோடி பட்ஜெட் ஆகும் என கூறப்படுகிறது. ஏற்கனவே சிம்பு சில படங்கள் சிம்பு சினி ஆர்ட்ஸ் என தந்தை டி. ராஜேந்திரன் தயாரிப்பு நிறுவனத்தில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.