5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து அரசியலிலும் இறங்கிவிட்டார். சமூக வலைத்தளங்களில் பலருக்கும் வாழ்த்துகளை மட்டுமே அடிக்கடி சொல்லி வருகிறார் விஜய். அதனால், அந்தக் கட்சியை தமிழக வாழ்த்துக் கழகம் என்று கூட 'டிரோல்' செய்தார்கள்.
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்க்கு இன்று பிறந்தநாள். பலருக்கும் வாழ்த்துகளைச் சொல்லும் விஜய் அவரது மகனுக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துகளைச் சொல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஜேசனை இயக்குனராக அறிமுகப்படுத்த உள்ள தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ், “வளர்ந்து வரும் இயக்குனர் ஜேசன் சஞ்சய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் பாதை வெற்றியாலும் முடிவில்லாத சாதனைகளாலும் நிரம்பட்டும். உங்கள் கனவுகளை நனவாக்குங்கள்,” என்று வாழ்த்தியுள்ளது.
ஜேசன் சஞ்சய்யை இயக்குனராக அறிமுகப்படுத்துகிறோம் என்று கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் லைகா நிறுவனம் அறிவித்தது. அப்போதும் விஜய் எந்த வாழ்த்துகளையும் தெரிவிக்கவில்லை. இன்று பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து, சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா ?.