ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை |

சூர்யா - சுதா கொங்கரா கூட்டணியில் உருவாக வேண்டிய படம் 'புறநானூறு'. ஆனால், அப்படத்தில் சூர்யாவுக்குப் பதிலாக சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக கடந்த சில வாரங்களாகவே செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கான ஒப்பந்தம் கூட கையெழுத்தாகிவிட்டது என்கிறார்கள்.
இந்நிலையில் இப்படத்தைத் தயாரிக்கப் போவது யார் என்ற கேள்வியும் இருந்தது. தற்போது அது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயனின் நண்பரும், 'பிரின்ஸ், மாவீரன்' படங்களின் தயாரிப்பாளருமான அருண் விஷ்வா, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் உறவினர் ரத்தீஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்க உள்ளார்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
படத்தை முதல் பிரதி அடிப்படையில் தனது சொந்த நிறுவனமான மீனாட்சி சினிமாஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கப் போகிறாராம் சுதா.
சிவகார்த்திகேயன் தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதற்கடுத்து 'டான்' இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ஒரு படத்திலும், வெங்கட்பிரபு இயக்க உள்ள ஒரு படத்திலும் நடிக்க ஏற்கெனவே ஒப்பந்தமாகியுள்ளார். அவற்றிற்கு முன்பாக சுதா இயக்க உள்ள 'புறநானூறு' படம் ஆரம்பமாகுமா என்பது இனிமேல்தான் தெரியும்.