தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளியாக தயாராகி வரும் படம் வேட்டையன். ஜெய் பீம் பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் படமாக இது உருவாகியுள்ளது. அது மட்டுமல்ல இந்த படத்தில் ரஜினிகாந்துடன் இதுவரை இணைந்து நடித்திராத நடிகர்கள் பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் என பலரும் நடித்துள்ளனர். இதில் பஹத் பாசில் ரஜினியுடன் படம் முழுவதும் இணைந்து பயணிக்கும் விதமாக நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் மஞ்சு வாரியர் இந்த படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்துள்ளார் என்கிற தகவல் உறுதியாகியுள்ளது. தற்போது மலையாளத்தில் தான் நடித்துள்ள புட்டேஜ் என்கிற திரைப்படம் குறித்த புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது மஞ்சு வாரியரே இந்த தகவலை கூறியுள்ளார்.
பீக்கில் இருந்த காலகட்டங்களில் ரஜினிகாந்துடன் ஜோடியாக நடிக்க முடியாத சீனியர் நடிகைகளான சிம்ரன், திரிஷா, ஈஸ்வரி ராவ் போன்றவர்கள் கடந்த சில வருடங்களாக அவருடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்று வரும் வரிசையில் தற்போது மஞ்சு வாரியரும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார்.