மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? |
ரயிலிலேயே படமாக்கப்பட்ட திரைப்படங்கள் ஏராளமாக வந்திருக்கிறது. தமிழ் சினிமாவில் முதன் முறையாக ரயிலிலேயே படமானது 'நீலகிரி எக்ஸ்பிரஸ்' என்ற படம்.
இந்த படத்தில் ஜெய்சங்கர், சோ, விஜய நிர்மலா, விஜய லலிதா, எஸ்.என். பார்வதி, எஸ்.ஏ.அசோகன், செஞ்சி கிருஷ்ணன், வி.எஸ்.ராகவன், எஸ்.வி. ராமதாஸ், கே.விஜயன் மற்றும் 'கள்ளபார்ட்' நடராஜன் உள்பட பலர் நடித்திருந்தார்கள்.
சென்னையில் இருந்து கோவை செல்லும் 'நீலகிரி எக்ஸ்பிரஸ்' ரயிலில் ஒரு கொலை நடக்கிறது. இறந்தவருடன் பயணித்த ஒரே ஒரு சக பயணி சோ. இந்தக் கொலைக்குப் பின்னால் இருக்கும் குற்றவாளியைப் பிடிக்கும் பணி சி.ஐ.டி ஜெய்சங்கருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே அவர் சோவின் உதவியுடன் வழக்கைத் தீர்க்கவும், இறுதியில் கொலையாளியைக் கண்டுபிடிக்கவும் புறப்படுகிறார். இதுதான் படத்தின் கதை.
புகழ்பெற்ற ஆங்கில நாவல் ஒன்றின் இந்த கதை தமிழில் மட்டுமல்ல மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும் தயாரானது. முதல் படமாக மலையாளத்தில் 1967ல் 'கொச்சின் எக்ஸ்பிரஸ்' என்ற பெயரில் தயாரானது. இதில் பிரேம் நசீர் வழக்கைத் தீர்க்கும் சிஐடி அதிகாரியாக நடித்தார். 1968ல் தமிழில் நீலகிரி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. திரைக்கதை வசனத்தை சோ எழுதியிருந்தார். திருமலை, மகாலிங்கம் இரட்டையர்கள் இயக்கி இருந்தனர்.