வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்த பலரும் ஓட்டலில், அல்லது கடையில் அல்லது ஒரு அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி இருப்பார்கள். ஆனால் ஒருவர் ஜெய்சங்கர் வீட்டில் வேலை பார்த்திருக்கிறார் அவர் குள்ளமணி.
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தை சேர்ந்த குள்ளமணி 6ம் வகுப்பு வரை படித்தார். அவரது உயரக்குறைவை பலரும் கிண்டல் செய்யவே, சினிமா அல்லது சர்க்கசில் சேர்ந்து விடலாம் என்று சென்னை வந்தார். வந்த இடத்தில் வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் ஆர்ய பவன் ஓட்டலில் கிளீனராக வேலை பார்த்தார்.
ஓட்டலுக்கு சாப்பிட வந்த இயக்குனர் தூயவன் அவரை ஜெய் சங்கர் வீட்டில் வேலைக்கு சேர்த்து விட்டார். சில ஆண்டுகள் அந்த வீட்டில் ஒருவராக இருந்தார். ஜெய்சங்கரும், அவரது அம்மாவும் அவரை தங்கள் வீட்டு பிள்ளைபோல பார்த்துக் கொண்டார்கள். ஜெய்சங்கர் நடிக்கும் நாடகங்களில் சின்ன சின்ன வேடத்தில் நடிக்க தொடங்கினார்.
பின்னர் 'நவாப் நாற்காலி' என்ற படத்தில் நாகேசின் தம்பியாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். 'பொய்சாட்சி' படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க போன இடத்தில் கே.பாக்யராஜை சந்திக்க அவர் தனது படங்களில் வாய்ப்பு கொடுத்தார்.
'ஸ்ரீதேவி' என்ற படத்தில் மனித குரங்காக நடித்தபோது மரம் விட்டு மரம் தாவியதில் தவறி கீழே விழுந்து பல மாதங்கள் வேலை இல்லாமல் இருந்தார். அப்போது பண உதவி செய்து கவனித்தவர் ஜெய்சங்கர். 500 படங்களில் நடித்த குள்ளமணி 30வது வயதில் திருமணம் செய்து கொண்டார். 2013ம் ஆண்டு தனது 61வது வயதில் காலமானார். தனது வீட்டில் ஜெய்சங்கர் படத்தை வைத்து தெய்வமாக வணங்கி வந்தவர் குள்ளமணி.