தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

பழம்பெரும் நடிகர் காக்கா ராதாகிருஷ்ணன். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பால்ய நண்பர். இருவரும் சேர்ந்து தான் நாடகத்தில் நடித்து பின்னர் சினிமாவுக்கு வந்தார்கள். கணேசன் பெயருக்கு முன்னால் 'சிவாஜி' வந்த கதை எல்லோருக்கும் தெரியும். ராதாகிருஷ்ணன் பெயருக்கு முன்னால் 'காக்கா' வந்தது எப்படி தெரியுமா?
'மங்கையர்க்கரசி' படத்தில் ராதா கிருஷ்ணன் நடிக்கும் போது அந்தப் படத்தில் அவரது அம்மா மன்னரை கைக்குள் போட வேண்டும் என்பதற்காக அவரை "காக்கா புடிடா காக்கா புடிடா" என்று வற்புறுத்திக் கொண்டே இருப்பார். இதை தவறாக புரிந்து கொள்ளும் ராதா கிருஷ்ணன் பல நாட்கள் அலைந்து திரிந்து நிஜமாகவே ஒரு காக்காவை பிடித்துக் கொண்டு வந்து தனது அம்மாவிடம் கொடுப்பார். 'போடா மடப்பயலே... மகாராஜாவைக் காக்கா புடிடான்னா.... நிஜக் காக்காவைப் புடிச்சிட்டு வந்திருக்கியே'னு திட்டுவார்.
இந்த காமெடி காட்சி அப்போது மிகவும் பிரபலம். இந்தக் காட்சியைப் பார்த்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், ராதா கிருஷ்ணணை 'காக்கா ராதாகிருஷ்ணன்'னு கூப்பிட ஆரம்பித்தார். பின்னர் அதுவே பெயராகிவிட்டது.