பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் | ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் | போட்டியின்றி இணைச் செயலாளராக தேர்வான் ‛திரிஷ்யம்' நடிகை |
மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கி வருகிறது. இதில் சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கி வருகிறது. 2022ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் டில்லியில் இன்று (ஆக.,16) அறிவிக்கப்பட்டன.
தேசிய விருதுகள் விபரம் வருமாறு :
சிறந்த படம் - ஆட்டம் (மலையாளம்)
சிறந்த நடிகர் - ரிஷாப் ஷெட்டி (காந்தாரா)
சிறந்த நடிகை - நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்), மானஷி பாரெக் (குச் எக்ஸ்பிரஸ்)
ஒட்டுமொத்த சிறந்த பொழுதுபோக்கு படம் - காந்தாரா
சிறந்த சமூக படம் - குச் எக்ஸ்பிரஸ்
சிறந்த இயக்குனர் - சூரஜ் ஆர்.பர்ஜத்யா (உன்சய்)
சிறந்த குணச்சித்ர நடிகை - நீனா குப்தா (உன்சய்)
சிறந்த குணச்சித்ர நடிகர் - பவன்ராஜ் மல்கோத்ரா (பவுஜா)
சிறந்த குழந்தை நட்சத்திரம் - ஸ்ரீபத் (மாளிகைபுரம்)
சிறந்த பாடகி - பம்பாய் ஜெயஸ்ரீ (சவுதி வெள்ளக்கா சிசி.225/2009)
சிறந்த பாடகர் - அரிஜித் சிங் (பிரம்மாஸ்திரா-1)
சிறந்த அறிமுக இயக்குனர் - பிரமோத் குமார் (பவுஜா)
சிறந்த ஒளிப்பதிவு - ரவி வர்மா (பொன்னியின் செல்வன்-1)
சிறந்த திரைக்கதை - ஆனந்த் எகார்ஷி (ஆட்டம்)
சிறந்த வசனம் - அர்பிதா முகர்ஜி, ராகுல் சித்தலா (குல்மோஹர்)
சிறந்த ஆடை வடிவமைப்பு - நிக்கி ஜோஷ் (குச் எக்ஸ்பிரஸ்)
சிறந்த மேக்-அப் - சோம்நாத் குண்டு (அபாரஜிதோ)
சிறந்த சண்டை இயக்குனர் - அன்பறிவ் (கேஜிஎப்-2)
சிறந்த இசை - பிரிதம் (பிரம்மாஸ்திரா-1)
சிறந்த பின்னணி இசை - ஏ.ஆர்.ரஹ்மான் (பொன்னியின் செல்வன்-1)
சிறந்த ஒலி வடிவமைப்பு - ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி (பொன்னியின் செல்வன்-1)
சிறந்த படத்தொகுப்பு - மகேஷ் புவநந்த் (ஆட்டம்)
சிறந்த பாடல் ஆசிரியர் - நவுசாத் சதார் கான் பவுஜா (ஹர்யான்வி)
சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் - பிரம்மாஸ்திரா-1
சிறந்த நடனம் - ஜானி மாஸ்டர், சதீஷ் கிருஷ்ணன் (மேகம் கருக்காதா - திருச்சிற்றம்பலம்)
மொழிவாரியாக விருதுகள்
சிறந்த தமிழ் படம் - பொன்னியின் செல்வன் (பாகம் 1)
சிறந்த தெலுங்கு படம் - கார்த்திகேயா-2
சிறந்த பஞ்சாபி படம் - பாகி டி தி
சிறந்த கன்னட படம் - கேஜிஎப்-2
சிறந்த மலையாள படம் - சவுதி வெள்ளக்கா சிசி.225/2009
சிறந்த ஹிந்தி படம் - குல்மோஹர்
சிறந்த மராத்தி படம் - வால்வி
சிறந்த அசாமி படம் - எமுதி புதி
சிறந்த பெங்காலி படம் - கபெரி அன்டர்தன்
சிறந்த ஒடியா படம் - டமன்
2 படத்திற்கு 6 விருதுகள்
இன்று அறிவிக்கப்பட்ட தேசிய திரைப்பட விருதுகளில் தமிழ் சினிமாவை பொறுத்தவரை பொன்னியின் செல்வன் (பாகம் 1) படத்திற்கு சிறந்த தமிழ் படம், பின்னணி இசை,ஒலி வடிவமைப்பு, ஒளிப்பதிவு ஆகிய பிரிவுகளில் 4 விருதுகளும், திருச்சிற்றம்பலம் படத்திற்கு சிறந்த நடிகை, நடன பயிற்சி ஆகிய பிரிவுகளில் 2 விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.