தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் |

'கஸ்டடி' நடிகரான நாக சைதன்யா, 'பொன்னியின் செல்வன்' நடிகையான சோபிதா துலிபலா இருவருக்கும் அவர்களது பெற்றோர் சம்மதத்துடன் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நடிகை சமந்தாவுடனான திருமண உறவை முறித்துக் கொண்ட பின் நாக சைதன்யா, சோபிதாவைக் காதலிப்பதாக செய்திகள் வந்தன. அதை அவர்களது நிச்சயதார்த்தம் உறுதி செய்தது.
இந்நிலையில் நாக சைதன்யா, சோபிதா திருமணம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. திருமணத்தை நீண்ட நாட்கள் தள்ளி வைக்க இருவரது குடும்பத்தினரும் விரும்பவில்லையாம். திருமண நிச்சயத்திற்குப் பிறகு மும்பையில் சோபிதா சென்ற போது அவரைப் புகைப்படமெடுத்த கலைஞர்கள் 'எப்போது பார்ட்டி' எனக் கேட்டுள்ளனர், அதற்கு விரைவில் என பதிலளித்துள்ளார் சோபிதா.
'டெஸ்டினேஷன்' திருமணமாக நடக்குமா அல்லது ஐதராபாத்தில் திருமணம் நடக்குமா என்பதும் விரைவில் தெரிந்துவிடும். நாக சைதன்யா, சமந்தாவின் திருமணம் 'டெஸ்டினேஷன்' திருமணமாக கோவாவில் நடைபெற்றது. அதனால், நாக சைதன்யா, சோபிதா திருமணம் ஹைதராபாத்தில் தான் நடக்கும் என்றும் சொல்கிறார்கள்.