துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
சினிமாவில் பெரிய வெற்றி பெற்ற காமெடி நடிகர்கள் காலத்தை கடந்தும் பேச வைப்பார்கள். ஆனால் சின்ன சின்ன கேரக்டரில் பெரிதாக சிரிக்க வைத்துச் சென்ற காமெடியன்களை சினிமா மறந்து விடும். அப்படியானவர்களில் ஒருவர்தான் என்னத்த கண்ணையா.
இன்றைய தலைமுறைக்கு அவரை அறிமுகப்படுத்த வேண்டும் என்றால் 'தொட்டால் பூ மலரும்' படத்தில் வடிவேலுவுக்கு கார் டிரைவராக வந்து 'வரும் ஆனா... வராது' என்ற டயலாக் மூலம் புகழ்பெற்றாரே அவர் தான் என்னத்த கண்ணையா. அந்த காலத்திலேயே எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களில் காமெடியனாக நடித்தவர். எம்.ஜி.ஆருக்கு பிடித்த காமெடியனாக இருந்தார். இதனால் தனது படங்களில் ஒரு காட்சியாவது கொடுத்து கை நிறைய சம்பளமும் கொடுப்பார். பின்னாளில் கலைமாமணி பட்டமும் கொடுத்தார்.
1949ல் பி.யு.சின்னப்பா, எம்ஜிஆர் இணைந்து நடித்த 'ரத்னகுமார்' படத்தில் கூட்டத்தில் ஒருவராக வந்தார் கண்ணையா. இதுதான் அவர் அறிமுகமான படம். 1950ல் வெளியான 'ஏழை படும் பாடு' படத்தில் சிறிய வேடம் ஒன்றில் நடித்து தன்னை அடையாளப்படுத்தினார். 1955ல் இருந்து சென்னைக்கு வந்து நிரந்தரமாகத் தங்கினார்.
இவர் பெயருக்கு முன்னால் 'என்னத்த' வந்தது தனி கதை. 1967ல் ரவிச்சந்திரன் நடிப்பில் வெளியான படம் 'நான்'. இந்தப்படத்தில் கண்ணையா எதற்கெடுத்தாலும் விரக்தியாக “என்னத்த வந்து... என்னத்த போயி...”ன்னு சொல்லிக்கொண்டே இருப்பார். இதுதான் அவரது பெயர் காரணமானது.