துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் போன்ற வெற்றி படங்களைக் தொடர்ந்து தற்போது இரண்டு குழந்தை நட்சத்திரங்களை வைத்து 'வாழை' எனும் படத்தை இயக்கியுள்ளார். இதில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இது மாரி செல்வராஜ்-ன் இளம் வயதில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கியுள்ளனர்.
ஏற்கனவே இந்த படத்தை பார்த்த பல திரைப் பிரபலங்கள் பாராட்டி வந்தனர். இந்த நிலையில் இன்று திரைக்கு வரும் வாழை திரைப்படத்தை பார்த்து நடிகர் தனுஷ் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்தி பதிவிட்டுள்ளார். அதன்படி, "சிரிக்கவும், கைத்தட்டவும், அழுகுவதற்கும் தயாராக இருங்கள். உங்களைக் கலங்கடிக்கச் செய்யும் உலகத்திற்குள் நுழைய தயாராக இருங்கள். உலகமெங்கும் உள்ள சினிமா ரசிகர்கள் கொண்டாடப்படும் அழகான படமாக வாழை உருவாகியுள்ளது. மாரி செல்வராஜ் மற்றும் படக்குழுவிற்கு வாழ்த்துகள்", என பதிவிட்டுள்ளார்.