எம்புரான் சர்ச்சையால் விருது குழுவால் புறக்கணிக்கப்பட்ட ஆடுஜீவிதம் : ஊர்வசி குற்றச்சாட்டு | தலைவன் தலைவி ரூ.75 கோடி வசூல் | விளம்பர வீடியோவில் உலக சாதனை படைத்த தீபிகா படுகோனே | கமல்ஹாசன் வாழ்த்தினார் : மற்றவங்க தேசிய விருது பெற்றவர்களை பாராட்டாத சினிமாகாரர்கள் | 400 படங்களுக்கு இசையமைத்த தேவாவுக்கு தேசிய விருது தரப்படாதது ஏன்? | கூலி டைம் டிராவல் கதையா.? | 500 கோடி வசூலைக் கடந்த 'சாயாரா' | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கனிமா' | ஸ்ரீதேவியை பார்த்து இன்ப அதிர்ச்சியான சுதீப் ; உஷார் படுத்திய விஜய் | அடூர் கோபாலகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும் ; பின்னணி பாடகர் சங்கம் கோரிக்கை |
சென்னை கலைவாணர் அரங்கில் அமைச்சர் எ.வ.வேலு எழுதிய 'கலைஞர் எனும் தாய்' புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின் வெளியிட நடிகர் ரஜினிகாந்த் பெற்று கொண்டார்.
விழாவில் ரஜினி பேசியதாவது: கருணாநிதி நுாற்றாண்டை கொண்டாடியது போல் வேறு எந்த தலைவரையும் கொண்டாடியது இல்லை. கலை, இலக்கியம், அரசியல் என அனைத்திலும் சிறந்த அறிஞர் கருணாநிதி. போட்டியிட்ட அனைத்து தேர்தலிலும் வெற்றிபெற்தே அவர் ஆளுமைக்கு உதாரணம். உலகில் வேறு எந்த தலைவரையும் இப்படி கொண்டாடியது இல்லை.
திமுகவில் மூத்த மாணவர்களை சாமாளித்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின். அவருக்கு 'ஹேட்ஸ் ஆப்'. அமைச்சர் துரைமுருகனை சாமாளிப்பது கடினம் என கருணாநிதியே சொல்லி இருக்கிறார். கருணாநிதியுடன் அரசியல் பேசினால் எச்சரிக்கையாக பேச வேண்டும். கருணாநிதி நினைவிடம் ஒரு தாஜ்மகால். கருணாநிதியின் பேச்சு வீணை போன்றது. பத்திரிகையாளர்களை புன்னகையுடன் எதிர்கொள்வார். கருணாநிதிக்கு வந்த சோதனை வேறு யாருக்காவது வந்தால் காணாமல் போயிருப்பார்கள். எதை பேச வேண்டும் என்பதை விட எதை பேசக்கூடாது என்பது முக்கியம்.
தேர்தல் வெற்றிகள் முதல்வர் ஸ்டாலின் ஆளுமையை காட்டுகிறது. கருணாநிதி மீது மிகுந்த பற்றும், மரியாதையும் கொண்டவர் ஸ்டாலின்.
புத்தகத்தின் விலை ரூ.1000 என்பது ரொம்ப அதிகம். குறைத்தால் அனைவரும் படிப்பார்கள். இவ்வாறு ரஜினி பேசினார்.