துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
சமீபத்தில் மலையாளத்தில் அறிமுகமாகி சில படங்களில் நடித்து வருகிற மாடல் அழகி சம்ரிதி தாரா. பல அழகி போட்டிகளில் பட்டம் வென்ற இவர் தற்போது 'மையல்' என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். இந்த படத்தில் அவர் 'மைனா' படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கராக நடித்த சேது ஜோடியாக நடிக்கிறார். சேதுவும் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார். ஏபிஜி.ஏழுமலை இயக்குகிறார்.
படம் பற்றி அவர் கூறியதாவது: ஒரு சாதாரண, அப்பாவி மனிதனின் உரிமைகள் மற்றும் வாழ்க்கையை நிலைநிறுத்தவும், பாதுகாக்கவும், சட்ட அமைப்பு எடுத்த தவறான முடிவுகளால் உண்மையான காதல் சிதைந்து விடுகிறது. இப்படி பாதிக்கப்பட்டவரின் கொந்தளிப்பான மனநிலையை மையக்கதையாகக் கொண்டது இந்தப் படம் திருவண்ணாமலைக்கு அருகில் அமைந்துள்ள கல்வராயன் மலையின் அழகிய இடங்களிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் முழுப் படமும் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் மொத்த படப்பிடிப்பும் 37 நாட்களில் நிறைவடைந்துள்ளது. என்றார்.