எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை |
ப்ரைடே பிலிம் பேக்டரி சார்பில் கேப்டன் எம்.பி.ஆனந்த் தயாரிக்கும் படம் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' . புதுமுகம் பிரசாந்த் முருகன் இயக்கி உள்ளார். கதையின் நாயகர்களாக பரத், சுஹைல், ராஜாஜி நடித்துள்ளார்கள். கதையின் நாயகிகளாக விருமாண்டி அபிராமி, அஞ்சலி நாயர், பவித்ரா லட்சுமி, மிருதுளா சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்கள் தவிர கனிகா, தலைவாசல் விஜய், அருள் டி சங்கர், பொற்கொடி, பிஜிஎஸ், கல்கி, சையத் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜோஷ் பிராங்ளின் இசை அமைத்துள்ளார். காளிதாஸ் மற்றும் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
ஹைபர் லூப் வகையை சார்ந்த திரில்லராக, உருவாகியுள்ள இந்த படம் வருகிற செப்டம்பர் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் அறிமுக விழா நடந்தது. விழாவில் நடிகை அபிராமி பேசும்போது “ஒரு சில படங்கள் தான், ஒரு பெரிய ஈடுபாட்டுடன் நம்மை பயணிக்க வைக்கும், அது போன்ற படம் தான் இது. இந்தப் படத்தில் பல உணர்வுகளை மிக அழகாக கடத்தியுள்ளார். எனக்கு மட்டுமல்ல மொத்த குழுவுக்கும், இது ஒரு முக்கிய படமாக அமையும்” என்றார்.