தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா |
மலையாள திரையுலகில் அட்ஜெஸ்மெண்ட், மீடூ பஞ்சாயத்துகள் தலைவிரித்து ஆடத் தொடங்கியுள்ள நிலையில் கவர்ச்சி நடிகை ஷகிலாவும் பல உண்மைகளை போட்டு உடைத்து வருகிறார். அப்படியாக அவர் கூறிய ஒரு செய்தியில் பிரபல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகையான ரூபா ஸ்ரீக்கும் அட்ஜெஸ்மெண்ட் பிரச்னை நடந்ததாகவும் அதிலிருந்து நான் தான் அவரை காப்பாற்றி அனுப்பி வைத்தேன் எனவும் கூறியிருந்தார்.
இதுகுறித்து தற்போது விளக்கமளித்துள்ள ரூபா ஸ்ரீ, 'அன்று ஷகிலா தான் என்னை காப்பாற்றி அனுப்பி வைத்தார். ஆனால், அவர் சொன்னது அத்தனையும் உண்மையல்ல. நான் மலையாளத்தில் இரண்டாவது கதாநாயகியாக ஒரு படத்தில் நடித்தேன். அப்போது வேறு ஒரு படத்திலும் நடித்து வந்தேன். படக்குழுவினரிடமும் இதை ஏற்கனவே சொல்லி அந்த படத்தின் ஷூட்டிங் போகவும், அதற்கு டாக்ஸி புக் செய்யவும் கேட்டிருந்தேன். முதலில் ஓகே என்று சொல்லியவர்கள், கடைசியில் என்னை அனுப்பாமல் பிரச்னை செய்தனர். அவர்கள் குடித்தும் இருந்தனர். அப்போது ஷகிலா தான் என்னை காப்பாற்றி அங்கிருந்து டாக்ஸி புக் செய்து அனுப்பி வைத்தார். அதன்பிறகு அந்த படத்தின் ஷூட்டிங் முடித்து இரண்டு நாட்கள் கழித்து நான் மீண்டும் அதே படத்திற்கு ஷூட்டிங் வந்துவிட்டேன். மற்றபடி அது அட்ஜெஸ்மெண்ட் பிரச்னை இல்லை' என்று கூறியுள்ளார்.