துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
கடந்த சில நாட்களாகவே மலையாள திரையுலகில் மிகப்பெரிய புயலை கிளப்பி விட்டுள்ளது நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை. கடந்த சில வருடங்களாகவே நடிகைகள் வாய்ப்புக்காக சமரசம் செய்து கொண்டு செல்லுமாறு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள் என்பது உள்ளிட்ட பல புகார்களை விசாரித்து அதில் உண்மை இருக்கிறது என்று அந்த விசாரணை கமிஷன் அறிக்கை கூறியுள்ளது. இப்படி ஒரு விசாரணை கமிஷன் அமைப்பதற்கு கேரளா அரசுக்கு அழுத்தம் கொடுத்தது நடிகைகள் ரேவதி, மஞ்சு வாரியர், பார்வதி, ரீமா கல்லிங்கல் உள்ளிட்ட சில முன்னணி நடிகைகள் ஒன்றாக இணைந்து உருவாக்கிய சினிமா பெண்கள் நல அமைப்பும் (WCC) ஒரு முக்கிய காரணம். தற்போது வெளியிடப்பட்டுள்ள ஹேமா கமிஷன் அறிக்கை அந்த அமைப்பின் முயற்சிக்கும் போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி என்று சொல்லலாம்.
இந்த நிலையில் நடிகை சமந்தா தெலுங்கானா அரசும் இதேபோன்று தன் வசம் உள்ள அறிக்கையை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கேரளாவில் சினிமா பெண்கள் நல அமைப்பு எடுத்த முயற்சிக்கு மிகப்பெரிய பாராட்டுகள். அதே பாணியை பின்பற்றி தெலுங்கு திரைப்பட உலகைச் சேர்ந்த எங்களைப் போன்ற பெண்கள் பலரும் கடந்த 2019ல் வாய்ஸ் ஆப் உமன் என்கிற ஒரு அமைப்பு மூலமாக தெலுங்கானா அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தோம்.
அதன்படி தெலுங்கு திரை உலகில் பெண்களுக்கான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து நடைபெற்ற உதவி விசாரணை கமிஷன் அறிக்கை ஏற்கனவே தெலுங்கானா அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை தற்போது வெளியிட்டால் அரசும் திரையுலகமும் இங்கு பணியாற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் சூழல் குறித்து எந்த விதமான முடிவுகளை எடுத்துள்ளனர் என்பதை தெரிந்து கொள்ள முடியும்” என்று கூறியுள்ளார்.
சமந்தா வைத்துள்ள இந்த கோரிக்கையை இன்னும் சிலர் வலுப்படுத்தும் விதமாக ஆதரிக்க துவங்கினால், வரும் சில நாட்களில் தெலுங்கு திரையுலகிலும் மலையாளத்தை போலவே ஒரு மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றே தெரிகிறது.