தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடிகர்களுக்கு எதிராக ஹேமா கமிஷன் விசாரண நடத்தி வருவதை அடுத்து பல சீனியர் நடிகைகளும் இதுகுறித்து பேச தொடங்கி இருக்கிறார்கள். என்றாலும் ரஜினி, கமல், விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் இது குறித்து கருத்து சொல்ல மறுத்து வருகிறார்கள்.
இந்நிலையில், பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் நடித்த ரேகா நாயர் இது குறித்து ஒரு அதிரடி தகவல் வெளியிட்டுள்ளார். அவர் கூறும் போது, மலையாள சினிமா மட்டுமின்றி அனைத்து மொழி சினிமாக்களிலும் பாலியல் அத்துமீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து துணிச்சலாக பேசும் நடிகைகளுக்கு முக்கிய நடிகர்கள் மிரட்டல் விடுகிறார்கள். அதன் காரணமாக பலரும் இதை வெளியில் சொல்லாமல் அமைதி காத்து வருகிறார்கள். மலையாள சினிமாவில் இந்த பாலியல் விவகாரத்தில் 10, 20 விக்கெட்டுகள்தான் விழும். ஆனால் தமிழில் பட்டியல் போட்டால் 500, 600 விக்கெட்டுகள் விழும்.
இங்கு நடிகைகள் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கும் நிலையில் சினிமா சங்கங்கள் இல்லை. விஷால் செருப்பால் அடிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் அவர் சொல்வதற்கு முன்பே நான் அடித்து விட்டேன். ஆனால் அடித்தவர்களை நீங்கள் எப்படி சித்தரித்தீர்கள். அடி வாங்குனவர்களை நீங்கள் எங்கே போய் வைத்துள்ளீர்கள். அவர்களுடைய பதவியை பறித்தீர்களா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ள ரேகா நாயர், 2014ம் ஆண்டு ஒரு ரியாலிட்டி ஷோவுக்கு வந்த பல பெண்களையும் மேனேஜர்கள் அழைத்து சென்றார்கள். அதை அப்போதே நான் ஓப்பனாக கூறினேன். அது நடந்து பத்து வருஷம் ஆகிவிட்டது. ஆனால் அப்படி வெளிப்படையாக சொன்ன பிறகும் அப்போது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.