துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
ஆந்திர, தெலங்கானா மாநிலங்களில் சமீபத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக பல பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அதற்கான நிவாரணத்திற்கு உதவி செய்வதற்காக தெலுஙகுத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்கள் பலரும் கோடிகளில் அள்ளிக் கொடுத்துள்ளார்கள்.
நடிகர் பிரபாஸ் 2 கோடி, சிரஞ்சீவி 1 கோடி, பாலகிருஷ்ணா 1 கோடி, மகேஷ் பாபு 1 கோடி, ஜுனியர் என்டிஆர் 1 கோடி, அல்லு அர்ஜுன் 1 கோடி என இரண்டு மாநிலங்களுக்கும் சேர்த்து கொடுத்துள்ளனர். ஆந்திர மாநில உதவிகளுக்கு அதன் துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் 1 கோடி கொடுத்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பவன் கல்யாண் ஏன் நேரில் செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கு, “நான் நேரில் செல்ல வேண்டும் என்றுதான் இருந்தேன். ஆனால், அதிகாரிகள் நான் நேரில் வந்தால் அங்கு கூட்டம் கூடினால் நிவாரணப் பணிகளுக்கு இடைஞ்சலாக இருக்கும் என்றனர். அவர்களுக்கு சுமையாக இருக்கக் கூடாது என்பதால்தான் நேரில் செல்லவில்லை” என விளக்கமளித்துள்ளார். அதே சமயம் நிவாரணப் பணிகள் மேற்கொள்வது குறித்து சம்பந்தப்பட்ட துறையினருடன் விவாதித்து நடவக்கை எடுத்து வருகிறார்.